பக்கம் எண் :

294 வலம்புரி ஜான்


காந்த மலைக்குள்

காணாமல் போன

கடையாணி போல...

மந்திரவாதி

மணியில் ஆனார் !

 

O

 

திருக்குர் ஆன் வசனங்கள்..

தேனா... தினைமாவா...

என்று

பட்டிமன்றம் நடத்தினார்.

 

O

 

அவரே அணிபிரித்து

வாதங்களை அடுக்கி

பாவமனிதர்களை

பரிசுத்தமாக்க வந்த

பஞ்சாமிர்தம் என்று

தீர்ப்புரை எழுதினார் !

 

O

 

நாள் முழுவதும் காத்திருந்து

செதில் மீன் கூட சிக்காமல்

அலகைத் தூக்குவதே

ஆபத்து என்று

மண்ணுக்குள் தலையை

மறைத்துக்கொண்ட

கொக்கைப் போல ஆனார்கள்

குறைசிகள் !