பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்295


சாந்த நபியா சபிப்பார் ?

 

சாந்த நபியே

சபித்தால் போதும்...

சாம்பலாகி விடுவார்கள்

சண்டாளர்கள்

என்று ஒருவர் கிளம்பினார்.

 

O

 

விருட்சங்கள்

விழுந்து விடலாம் ;

விதைகளாவது

நேர்வழிப்படலாமே என்றார்

நபிகள் !

 

O

 

தீர்க்க தரிசிகளுக்கு...

பன்னீர் மரங்களின்

பச்சை நிழலா

பந்தல் அமைத்தது ?

கற்பூர நெருப்பல்லவா

களம் அமைத்தது ?