பக்கம் எண் :

296 வலம்புரி ஜான்


சபிக்கவா வந்தேன் ?

குளிரைப் போர்த்திவிடுங்கள்...

வல்லவன் வகுத்த

வசந்தம் -

வாசலில் நிற்கிறது !

என்றார்கள் எம்பெருமான்.

 

O

 

விந்தை மனிதரின் விண்ணேற்றம்!

 

O

 

பூமிமகள்

இருட்டுப் போர்வையால்

தன்னைப்

போர்த்திக் கொண்டாள்.

 

O

 

தூக்கத்திலும்

வெளிச்ச நபி

விழித்திருந்தார்!

 

O

 

வானவர் வந்தார்

சுவன்ன தேசத்தின்

சுந்தர விலங்கொன்று வந்தது.