பக்கம் எண் :

298 வலம்புரி ஜான்


எருசலை வந்தார்.

பள்ளிவாசலில்

நபிகளுக்கெல்லாம்

இமாமாய் இருந்து

தொழுகை நடத்தினார்

தூயவர் நாயகம்.

 

O

 

வான மண்டலத்தில்

ஆதம் நபி முதல்

ஆபிரகாம் வரையிலும்

சாந்த நபிக்கு

சலாம் வைத்தார்கள்

நபிகளும் வாழ்த்தினார்!

 

O

 

அல்லாவின்

பேரொளிப் பிழம்பினை

அண்ணல் பார்த்தார்.

 

O

 

சொர்க்கமும் நரகமும்

கண்களில் பட்டன!

 

O

 

வேத நாயகனை

விளங்கும் மெய்ப்பொருளை

ஆதிமுதலை

ஆனந்த வாரிதியை

மனம், மொழி, மெய் கடந்த

மாயப் பெருவெளியை

நபிகள் பெருமான்...

உரோமக்கால்கள்

ஒவ்வொன்றிலும்

ஊற்றிக்கொண்டார்!