பக்கம் எண் :

302 வலம்புரி ஜான்


குறைந்த விலைக்கு

விற்று விட்ட

குறைசிகள் !

 

O

 

உம்மைப் போன்ற

ஒரு மனிதன்.

எனினும் தூதன் நான்...

நபிகள் நவின்றனர்.

வானவரும் மனிதரும்

ஒன்று சேர்ந்தே

உழைத்தாலும்...

திருக்குர் ஆனைப் போல

தெள்ளிய இலக்கியத்தைத்

திரட்டுதல் அறிதென்று

வானவசனம் வந்து சேர்ந்தது !

 

O

 

கட்டி முடிக்கப்பட்ட இல்லத்தை

வெறித்துப் பார்க்கிற

கண்ணேறு போல...

குறைசிகள் ஆனார்கள்!

சிலுவை மதத்தான் ஒருவன் தான்

வள்ளலுக்கு

வசனங்களை வழங்குகிறான்

என்று

வெற்றிலைச் சாற்றால்

வெண்பட்டைக்

கறைப்படுத்தினர்

குறைசிகள்!