பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்303


அரபியே அறியாதவர்

குரானின் வசனத்தை

கொண்டு வருவது

எப்படி என்று

வசனம் வந்தது.

 

O

 

கால்களே இல்லாதவன்

ஒலிம்பிக் ஓட்டத்தில்

முதல் பரிசு பெறுவானா?

 

O

 

அரேபியாவின்

பூகோள எல்லைகளைத்தாண்டி

புனித நதி

பூமி முழுவதும்

புரளவேண்டும் என்பது

நபிகளின் ஆசை.

 

O

 

இயல்பாகவே பரவட்டும்

இஸ்லாம்.

 

O

 

குளத்திற்குக்

குதிரையை கொண்டுசென்றாலும்

குடிப்பதும்

குடிக்காதிருப்பதும்