பக்கம் எண் :

304 வலம்புரி ஜான்


 

குதிரையைப் பொருத்துத்தானே?

கருதினான் கருத்தன்.

 

O

 

அக்பா என்கிற இடத்திற்கு

அண்ணல் வந்தார்.

அறுவர் இணைந்தனர்.

அடுத்த ஆண்டும்

அதே பொழுதில்

அறுவர் சேர்ந்தனர்.

 

O

 

பருப்புகளைப்

பாதுகாப்பதற்காக

வளைந்து வெளிவந்த

இஸ்லாமியச் செடி

கொஞ்சம் கொஞ்சமாக

நிமிர ஆரம்பித்தது.

 

O

 

பன்னிருவர்

விரும்பிய வண்ணமே

யத்ரிப்பில்

இஸ்லாம்

வேர் பிடிக்கத்

தொடங்கிற்று.