பக்கம் எண் :

306 வலம்புரி ஜான்


கறுப்பு வண்ணம் அடிக்கிறார்கள்:

காகம் என்றும் எழுதுகிறார்கள்:

வகுப்பென்னவோ முதுகலை

வகுக்கிற பாடம் என்னவோ...

பாலர் பள்ளி

பிஞ்சுகள் பாடம்!

 

O

 

ஒரு நாள் நள்ளிரவு...

காற்று-இலைகளுக்குக்

கடுதாசி எழுதிக்கொண்டிருந்தது!

 

O

 

நட்சத்திரங்கள்

நிலவில்

தலைவாரிக் கொண்டன!

 

O

 

பகலின் கொப்புளங்களுக்கு

இரவு-

அஞ்சனம் அப்பிக்கொண்டிருந்தது!

 

O

 

அன்று

பயணப்பெரு நாள்.

நாயகத்தின் தலைமையில்

கீரைப்பாத்திகளைக்

கிள்ளி எறிந்துவிட்டு

வயல் மைதானத்தை