பக்கம் எண் :

308 வலம்புரி ஜான்


கூடவே

அப்பாசும் வந்தார்.

இந்த இரவில்தான்

இஸ்லாமிய நதியில்

வரலாற்றுச் சுழிப்பொன்று

வரவு வைக்கப்பட்டது!

 

O

 

அடிமையைப் போல

நபிகளை விரட்டிய

காலத்திற்கு...

நரைவிழுந்தது!

 

O

 

அரசனைப் போல

வள்ளலை வரவேற்ற

நேரத்திற்கு

மீசை முளைத்தது...

 

O

 

அப்பாஸ்-

தம்பி மகனைத்

தக்க வண்ணம்

தாங்க வேண்டும்

என்று கேட்டார்.

 

O

 

கேள்விகளுக்குக்

காதுகள் முளைத்தன.