பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்309


சூதர்களோடு உறவுமுறைகளைச்

சுண்ட அறுத்துவிட்டு

போதகரே! உம்மிடம்

புறப்பட்டு வருகிறோம்

கைமாறு என்ன?

கேட்டார்கள்...

சொர்க்கத்தில்

இருக்கை உறுதி...

அண்ணல் வாக்களித்தார்கள்.

 

யத்ரீப் யாத்திரை

 

O

 

கரடிகளின்

கைப்பிடிக்குள் அகப்பட்ட

தேன்கூட்டிலிருந்து

திசைக்கொன்றாய் தப்பிய

தேனீக்களைப் போல

மக்கா முஸ்லீம்கள்

யத்ரீபிற்கு

யாத்திரைப்பட்டனர்!

 

O

 

கடைவாய்ப்பற்களுக்கு

கடலை கிடைக்காமல்

உமிழ்நீரை அரைக்கிற

குரங்குகளானார்கள்

குறைசிகள்!