பக்கம் எண் :

310 வலம்புரி ஜான்


அபூபக்கர், அலி

இருவரும்

அண்ணலோடு

மக்காவில் இருந்தார்கள்!

மற்றவர்கள்

மதீனத்திற்குச் சென்றார்கள்.

 

O

 

திமிங்கிலத்தின்

பற்களுக்கு நடுவில்

நாம் ஏன்

திரண்டிருக்க வேண்டும்?

 

O

 

மதீனத்திற்கு

மாறிவிடலாமே-

அபூபக்கர் கேட்டார்.

 

O

 

கருத்தனின்

கட்டளைக்காகவே

காத்திருக்கிறேன்

என்றார் பெருமான்.

இதற்குள்...

இங்கிருந்தும் அங்கிருந்தும்

நபிகள் பெருமானை

மக்கள்-

இலையோடு இல்லை...