பக்கம் எண் :

312 வலம்புரி ஜான்


சிறைவைக்க நினைத்தார்கள்...

போனால் போகட்டும் - சிலர்

 

O

 

சேருகிற இடத்திலிருந்தும்

சிந்துமே வெளிச்சம் - சிலர்

 

O

 

படை நடத்தி நம்மை

பழி தீர்த்துவிட்டால்...

-         இன்னும் சிலர்

 

O

 

இப்படி-

கட்டுவிரியன் பாம்புகள்கூடி

கலைப்படம் எடுப்பதைப்பற்றி

கதைத்தன.

 

O

 

உன்மத்தன் உயிருக்கு

இன்றே இறுதி என்று

இறுமாப்பில் கத்தினர்.

 

O

 

உயிரைப் பறித்தவனை

விட்டுவிடுவார்களா?

நெருப்புக்குச்சி ஒன்று

நீராடப் போனது...

வீட்டுக்கொருவீரர்

விரைவீர்!