பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்313


நூறுவாட்கள் ஒரே நேரத்தில்

அவரது

நுரையீரலுக்குள்

நுழைந்தால்

எவர் வாளென்று

எவர் அறிவார்?

 

O

 

நூறு பேர்களைக்

கொன்றுகுவிப்பது

பனூஹாஷிம்களுக்கு

இயலுவது அல்ல-

இதயங்கள் இருமின!

 

O

 

குளம் வெட்ட

கூட வேண்டிய கைகள்

காட்டை அழிக்க

கையெழுத்திட்டன...

 

O

 

முதுமை தட்டிய இரவில்

முகம்மது இல்லம்

முற்றுகையிடப்பட்டது.

 

O

 

குணவதிகள் இருக்கும் இல்லத்தில்

குறைசிகள் இரவில்