பக்கம் எண் :

314 வலம்புரி ஜான்


நுழைவதில்லை...

ஆமை முட்டைகளை

அள்ளி விழுங்குவதற்காகப்

புறப்பட்ட காட்டுநரிகள்

இரவுநேர விருந்திற்கு

இடைவேளை விட்டன!

 

O

 

பச்சைப் போர்வை ஒன்று

எழுவதும், விழுவதுமாக

உயிர் ஒன்று உள்ளே

ஓய்வெடுக்கிறது என்று

விளம்பரித்தது.

 

O

 

ஆனந்தம் அடைந்த

அபூஜகலின் தலை

மேகங்களைத்

தரித்துக்கொண்டது!

கால்களோ

கடலின் பரப்பை

அளவெடுக்க ஆரம்பித்தன!

 

O

 

கதிரவன்

கண்ணைக்கசக்கினான்.

 

O

 

கடிகாரச்சேவல்

சூரியப் பூவினை ச்