பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்315


சூடமுடியாமல்

அவிழ்ந்த கொண்டையோடு

அலைந்தது!

 

O

 

பாய்ந்தனர்

பகைவர்கள்...

பச்சைப் போர்வையைப்

பந்தாடினர்...

உள்ளே இருந்த

அலியைப் பார்த்ததும்

உள்ளம் உடைந்தனர் -

எங்கே முகம்மது ?

எங்கே முகம்மது ?

கேள்விகள்... கேள்விகள்...

 

O

 

வினாக்குறிகள்...

வளையங்களாகி

மக்காமணலில்

முக்குளி போட்டன !

 

O

 

ஆண்டவன் அறிவித்தபடி

விழிகளைத் தொலைத்துவிட்ட

கும்மிருட்டில்

வெளிச்சப்பறவை

அபூபக்கரோடு

வெளியேறிவிட்டது.