| குகைதோறும் பார்க்கையில்... அமர்ந்த கோலத்தில் அண்ணலைக் கண்டார். O ஆட்டின் பால் இருவருக்கும் - அமுதமாய் ஆயிற்று... பலநாள் பசியாய் இருந்த பாம்பு தவளையைத் தப்பவிட்டுவிட்டு காடெல்லாம் தேடியது போல குறைசிகள் ஒவ்வொரு குகையாக உற்றுப்பார்த்தனர் ! O அவர்களின் பேச்சுக்குரல் கேட்டது... அபூபக்கரின் இதயம் உதரவிதானத்தின் உள்ளே விழுந்தது ! O நபிகளோ... நடுக்கமே இல்லாமல் நாயனை மாத்திரமே நம்பி இருந்தார். |