பக்கம் எண் :

318 வலம்புரி ஜான்


இருவரின்

கால்விரலை அவர்கள்

கண்டு கொண்டாலும்

கதை

கந்தலாகி விடுமே ;

உப்புப்படிந்த சொற்கள்

அபூபக்கரின்

உதடுகளில்

அடிக்கோடு போட்டது -

 

O

 

இருவரா நாம்...

மூவர் !

அல்லா நம்மோடு

அருகிலிருக்கிறார்

நபிநாதர் நாவசைத்தார்.

 

O

 

அப்போது

ஞானப் பூச்சியான

சிலந்தி ஒன்று

குகையின் வாயிலை அடைத்து

நூல் கோலம் போட்டது !

 

O

 

முகம்மது பிறப்பதற்கும்

முன்னரே

பின்னிய வலையாகப்