பக்கம் எண் :

320 வலம்புரி ஜான்


மேற்கில் உதித்த

மேன்மைச் சூரியன்

படுதிசை நோக்கிப்

பயணப்பட்டார்.

 

O

 

குறைசியர் கூட்டம்

அமில நெருப்பில்

அழுந்தி எரிந்தது !

சுராகா என்பவன்

பாலைவனத்தில்

பயணப்படுகிறார்

அண்ணல் என்பதை

அறிந்தான்...

அண்ணலைப்பிடித்தால்

பரிசு உண்டு.

நூறு ஒட்டகங்கள்

நுரைதள்ளி நின்றன...

சுராகாவின் குதிரைக்குக்

கொம்புகள் முளைத்தன -

 

O

 

அது

காற்றைக் கிழித்துக்கொண்டு

கடுகியது !

 

O

 

அபூபக்கர் அரற்றினார்.   

நபிகளோ -