பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்321


தேவனின் வேலை

தீனவரைக் காப்பது என்று

தெளிவாயிருந்தார் !

 

O

 

சுராகா

மும்முறை முயன்றார்,

அம்பினை எடுத்து

அண்ணலை எதிர்த்தார்.

அவரது முயற்சி

மரக்கிளை ஒன்று

மஞ்சள் நிலவைக்

கிழிக்க முயன்றது

போல இருந்தது...

 

O

 

மாபெரும் சக்தி

தனக்கெதிராக

மதிற்சுவரெழுப்புகிறது என்று

சுராகா உணர்ந்தார்

இறுதியில் இறங்கி வந்தார்.

மாநபி மணியிடம்

மன்னிப்புக் கோரினார்.

 

O

 

உன்னத நிலைக்கு

உயர்ந்திடும் போது

காத்திட வேண்டும்

கருணை வள்ளலே