பக்கம் எண் :

322 வலம்புரி ஜான்


என்று அரற்றினார்

அன்பின் ஆண்வடிவமான

அண்ணல் மன்னித்தார்.

 

O

 

ஒட்டகங்கள்

ஓடின...

எழுபத்து ஒருவர்

எதிர்ப்பட்டனர்.

 

O

 

ஒட்டகக்கனவுகள்

ஓணான்களைக் கூட

விடவில்லை !

 

O

 

அண்ணலார்

அமுதவாய் திறந்தார்,

தலைவரோ

தலைப்பாகை தனைக்கிழித்தார்.

தவழ்ந்தது வெண்கொடி !

விரைந்து வந்து

மக்கள் மன்றில்

அண்ணலார்

அமைதியின் தூது

என்று -

அறிவித்து மகிழ்ந்தார்.

 

O