பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்323


மதீனா மலர்ந்தது !

 

O

 

மலை அடிவாரத்தில்

மக்களின் கூட்டம்

நாயகம் வருவதை

நாளும் பொழுதும்

எதிர்பார்த்திருந்தது...

அடிவானத்தில்

அப்பிய கண்களை

ஆயிரம் மனிதர்கள்

அகற்றவே இல்லை.

 

O

 

இறுதியாக

ஒருநாள் மாலை

வான வசந்தம்

வந்து சேர்ந்தது...

 

O

 

வாலிப மணல் வெளி

வயதுக்கு வந்தது !

 

O

 

புல்புல் பறவைகள்

புல்லாங்குழலில்             

பூபாளம் இசைத்தன !