| குபா என்பது பச்சை வண்ணத்தில் பதியப்பட்ட ஓவியச் சிற்றூர் - O குடியானவர்களின் அதிகாலைக் கனவு ! O அமர் என்றொருவர் அமருக என்றார்... தங்கிப் போகலாம் தாங்கள் என்றார்... அண்ணல் அங்கிருந்த காலை ஆடவரும் பெண்டிருமே அணியணியாய் திரண்டு வந்தனர். O வெப்ப அப்பத்தையே விழுங்கி - வயிற்றையே அடுப்பாக்கியவரும்... வள்ளலின் வதனத்தில் வாழ்வினைக் கண்டு கொண்டார்! |