| வீங்கிய கால்களோடு அலியோ தவழ்ந்து வந்தார் - அவரிருந்த இடம் சென்று... அண்ணலார் அவரை ஆரத் தழுவினார் ! O அன்பு மக்கள் அனைவரும் ஆசைப்பட்ட வண்ணமே பள்ளிவாசல் ஒன்றினை படைக்கலானார் வள்ளலும். O தோளின் மீதுகற்களைத் தூய நபிகள் சுமந்ததும் தம்பிரானை மக்களும் தடுக்கவே முனைந்தனர். O சிங்கவால் குரங்கெல்லாம் சிம்மாசனம் கேட்கிறபோது நபிகள் நான்குபேரைப் போலவே நடத்தினார் தன்னை என்பது வியப்பிலும் வியப்பன்றோ ? O பதினான்கு நாட்கள் பறந்தன... |