| பரிசுக் குலுக்கலில் பணமழை பெய்தாற்போல் இல்லத்தார் அனைவரும் இதயத்தால் வாழ்த்தினர். O ஒட்டகம் நின்ற இடத்தில் உயர்த்தினார் பள்ளியை. அந்நிலம் அநாதைச் சிறுவர்க்கு ஆனது... O தானமாய் தருவதற்குத் தளிர்கள் முன் வந்தன! நாயக நீதியில் சுலைமான் நபிகளே சுண்டிப்போனார் ! O கண்ணில்லாதவர்களின் கையகல நிலத்தைக்கூட விழுங்கியே வீங்கும் நில முதலைகளால்... பூமி - புழுத்துப் போனது. ஆனால்... அன்றே நபிகள் அநாதைச்சிறுவரிடம் அள்ளிப் பணம் தந்தே அந்நிலத்தைப் பெற்றார்கள். |