பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்329


அநாதைகள்

கடந்து வந்த பாலை வழிகளை

கச்சிதமாக மறந்துவிட்டு

அரசர்களைப் போல

ஆரவாரிக்கிற நாட்களில்

அரசர்க்கரசர்

அனாதையாய் ஆனதை

அவ்வப்போது

எண்ணியிருக்கிறார்.

 

O

 

பட்டுப்பூச்சியாய்

பறக்கிற போதும்

முட்டையாய் இருந்ததை

முழுமையாய் நினைப்பது

கதைகளில் வருவது...

கனவில் நிகழ்வது...

 

O

 

கோடியில் ஒருவர்

அண்ணலென்பதற்கே

குறித்தேன் இதனை.

 

O

 

ஊரார் அனுப்பிய

உணவினை உண்டு

நாயகவள்ளல்             

நாட்களை நகர்த்தினார்.