பக்கம் எண் :

330 வலம்புரி ஜான்


தீபம் ஏற்ற இயலாத

வறுமையில்...

தீர்க்கதரிசி வாழ்ந்தார் !

 

O

 

சூரியனைச் சுட்டிக்காட்ட

சுடர்விளக்கு நாணியதோ?

 

O

பாலோ, இறைச்சியோ

பரமன் தந்ததில்

பசியாறிக் கொள்வார்.

பட்டினி என்றால்

இறைவனே போதும் -

இயம்புவார் நபிமணி.

 

O

 

ஒட்டகத்தில்

பாலைக் கறப்பது முதல்...

ஒட்டடை

அடிப்பது வரை...

நபிகளே செய்வார்.

 

O

 

மனவேலைதான்

மகத்துவமானது ;

உடல் உழைப்பு

உயர்ந்தது அல்ல