பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்331


என்கிற

வெட்டிவேதாந்தம் தான்

வீழ்த்துகிறது நாடுகளை.

 

O

 

ஆயிரத்து நானூறு

ஆண்டுகள் முன்னர்

உடல் உழைப்பின் மேன்மைக்கு

உப்பரிகை அமைத்தார்

நபிகள் நாயகம் !

 

O

 

கிழிந்த உடை தைப்பார்

கீழே குனிந்து பெருக்குவார் ;

முகம் பார்க்க ஆடி இன்றி

பாத்திரத் தண்ணீரில்

பார்த்தலே போதுமென்பார்.

 

அகதிகளின் தேசம் . . .

 

O

 

மக்காவில்

மாளிகைகளில்

வாழ்ந்தவர்கள் -

மதீனாவில்...

மண்குடிசைக்கும்             

மார்க்கம் இன்றி ஆனார்கள் !