| கோல் ஊன்ற இடம் கிடைத்தால்... தலைவர்களுக்குக் கால் வளரத்தொடங்கிவிடுகிறது ! O கண்ணுக்கு எட்டிய பூமியைச் சுருட்டி... கக்கத்தில் வைத்துக் கொள்ளுகிறார்கள். O நபிகளோ... நமக்குக் கிடைத்த இடம் நம்பி வந்தோருக்கும் அமைந்திட வேண்டுமென்று நாளும் உழைத்தார்! O அகதியாய் வந்தோரை மதீனா வாசிகளின் அடைக்கலமாய் ஆக்கினார். பாலை மணலில் பனி நதிகள் புரண்டன! O அண்ணல் - அரசியல் தலைவர் ! O போதகர் என்றால் பொறுத்துப் போகலாம். |