பக்கம் எண் :

334 வலம்புரி ஜான்


பொதுநிதி என்றே

புதுக்கிக் காட்டினர்.

 

O

 

பூமி உருண்டையை

பூசணித் துண்டுகளாக்குவதே

மண்புழு மனிதர்களின்

மனப்போக்கு.

 

O

 

இந்த மனக்கழுதையை

மறியல் நடத்தி...

மடக்கிப் பிடித்தவர்

மாநபி மணிகள் !

 

O

 

இயந்திர மதங்களால்

பூமியின் முகத்தில்

அம்மைத் தழும்புகள்

ஆதிக்கம் செலுத்தின !

 

O

 

இதயத்தைச் சுற்றி

மார்க்கம் எழுப்பினார்

நபிகள் பெருமான்.

 

O

 

துளிகளுக்கெல்லாம்

கடலின் தொகுதிகள்