பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்339


மாதவச்செல்வர்

மழையாய் வந்தார்!

பட்டாபிஷேகம்

பாதியில் நின்றது.

பாதிக்கப்பட்டான்

இப்னுஉபை.

 

O

 

இவன் -

இதயத்தைக்கழற்றி

ஈச்சமரத்தில்

காயவைத்து விட்டு

இஸ்லாத்தைத் தழுவினான்.

 

O

 

உண்மையைக் கழுவேற்ற

உரியநேரம் பார்த்திருந்தான்.

 

O

 

மக்கா குறைசிகள்

மடல் ஒன்று அனுப்பினர்.

முகம்மது அங்கே

முற்றுகை இட்டால்

மதீனா நகரம்

மண்மூடிப்போகும்...

 

O

 

எதிர்வரும் புயலை

எடுத்தே உரைத்தார்