பக்கம் எண் :

344 வலம்புரி ஜான்


காற்று அடித்துப்போன

ஒட்டகங்களைத்தேடி

கண்ணியத்திற்குரியவர்கள்

இருவர் அலைந்தனர்.

 

O

 

சிறுமைக்குறைசிகள்

சிறைப்பிடித்தனர்.

 

O

 

அப்துல்லா தலைமையில்

அண்ணலின் ஆட்கள்

ஆங்கே திரண்டனர்...

அம்புகள் -

கேள்வி பதில் எழுதின !

 

O

 

கூட்டத்தலைவன்

குலைந்தே விழுந்தான்.

 

O

 

சிலிர்த்தவர்கள்

சிறைப்பிடிக்கப்பட்டார்கள்.

 

O

 

பொன்னையும் பொருளையும்

வெற்றி பெற்றவர்கள்

நகங்கள் அழுக்கைப்போல

நகர்த்திக்கொண்டு வந்தார்கள்.