பக்கம் எண் :

348 வலம்புரி ஜான்


வரம்பு மீறுகிறவர்களை

வல்லவன் அல்லா

விரும்புவதில்லை.

 

O

 

தாக்கினால்

தாக்கென்றும்...

தற்காப்புப்

போரென்றும்...

இறைமொழி விளக்கம்

இனிதே விரிந்ததால்

சலனக்குமிழிகளுக்கு

சமாதி கட்டப்பட்டது!

 

O

 

அண்ணலோடு

அமைந்த வீரர்கள்

அதிகம்பேர்களில்லை -

மொத்தமே

முன்னூற்றுபதின் மூவர்.

 

O

 

வாட்களோ எட்டு...

கவசமோ ஆறு...

குதிரைகள் எழுபது...

எதிராளிகளிடத்தில்

எல்லாம் இருந்தது...

நபிகளிடத்திலோ -

அல்லா இருந்தான்!