பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்349


இறைவனின் -

தாளைப்பிடித்தகை - இன்று

வாளைப்பிடித்தது!

 

O

 

புன்னகைப் பூக்கள்

உதிர்ந்தன.

புருவமேடுகளில்

கூரிய முட்கள்

குதிர்த்தன!

 

O

 

பத்ரு -

வரலாற்றுக்கு

வரிவாசல் திறந்துவைத்த

வாகைப்பூக்களின்

வசந்த மண்டபம் -

வீரம் விளைந்தகளம் -

 

O

 

போர்களின் வரலாற்றில்

பொன் மகுடம் பூண்ட

இத்தலத்தில்

இஸ்லாமியப்படைகள்

இறங்கின.

 

O

 

ஒற்றர்கள் -

கருமேகம் திரண்டபோது

மகரந்தத்தேன்