பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்351


எதிரி அபூசுப்யான்

இந்தியச் சாணக்கியனின்

இளையதம்பி!

 

O

 

முஸ்லிம் ஒற்றர்களின்

ஒட்டகங்கள்

வெளியேற்றிய

கழிவின் அருகே அமர்ந்து

அகழ்வாராய்ச்சி நடத்தினான்.

 

O

 

சாணப் பெருக்கில்

பேரீச்ச விதைகள்

சிறுத்திருத்ததைப் பார்த்தான்.

 

O

 

சிறிதான பேரீச்சை

மதீனாவில்தான்

உண்டெனக் கண்டான்.

 

O

 

நரகனின் மூளைக்கு

நான்கு கால் பாய்ச்சல்...

திசையை மாற்றினான்-

 

O

 

முஸ்லிம் ஒற்றர்களுக்கு

இரண்டு சிறுவர்கள்