பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்353


எதிர்வீட்டு பாதுகாப்பு கருதி

தன் வீட்டைப்

பூட்டுகிறான் ஒருவன் -

தன்னைத் திருடன்

என்று

ஊருக்கு அறிவிக்கிற

உபாயம்தான் இது என்று

தவறு கண்டுபிடிக்கிறான்

எதிர்வாடையில்

இருக்கிறவன்.

இப்படி உலகத்தில்

உயிரை உறிஞ்சத்

துடித்தவர்களின்

மூச்சுக்காற்றுக்கும்

முழுக்கைச்சட்டை

போடுகிறார்

முகம்மது-பெருமான்...

 

O

 

அபூசுப்யான்

சூறாவளிக்குத் தப்பிய

சுடராய் -

அனுப்பியவருக்கே திரும்பிய

அஞ்சலாய்

மக்காவிற்குத் திரும்பினார்.

 

O

 

அபூஜகல்

நனைந்த விறகிற்கு

நெருப்பில் என்ன