பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்355


ஊற்றுகள்

வளைக்கப்பட்டன.

பகைவர்கள்

ஆங்கேவரும் முன்னரே

முஸ்லிம்கள் அவ்விடத்திற்கு

முன்னேறிச் சென்றனர்.

 

O

 

ஊற்றுகள் முஸ்லிம்களின்

வசமான பின்னரும் ...

பகைவரும்

பருகத்தண்ணீர்

பெறவேண்டும் என்பதில்

பாசமுள்ள நபி

குறியாக இருந்தார்!

 

O

 

கொழுவுகளில் தொங்குகிற

சட்டைகளைப் போல

தூக்கம் முஸ்லிம்களைத்

தொங்கப் போட்டது.

 

O

 

இரண்டே விழிகள்

இமையாதிருந்தன ...

இரண்டே கைகள்

விண்ணோக்கி

விரைந்தன ...

அவை நம்

நாதருடையவை.