பக்கம் எண் :

358 வலம்புரி ஜான்


நடுங்க வைக்கிற

பகைக் காற்றிலிருந்து

நாயகவிளக்கைக்

காத்தால் போதும்,

அந்த வேள்வியில்

குருதி -

நெய்யாகட்டும் ;

நரம்புகள் -

திரியாகட்டும் ;

கபாலங்கள் -

கிண்ணங்களாகட்டும்

என்று நின்றனர்!

 

O

 

நிலவை எடுத்து

நெற்றிக்குப்

பொட்டாக்கியதைப்போல...

காற்றைக் கைது செய்து

மூக்கு முகத்துவாரங்களில்

முகாமிடவைத்தது போல...

நபிகள் பெருமானை

கூடாரம் ஒன்றில்

குடியிருக்க வைத்தனர்.

 

O

 

அபூபக்கர்

அந்தக்

காலக்கனவை...

கண்களுக்குள் வைத்தார்

இமைவேலி எழுப்பினார்!