பக்கம் எண் :

360 வலம்புரி ஜான்


இறைவன் பேசினான் ;

வெற்றியின் விதைகள்

அப்போதே

நபிகளின் -

உள்ளங்கைப் பள்ளத்தாக்கில்

விருட்சங்கள் ஆயின.

 

O

 

ஆணையிட்டே உரைக்கிறேன் ;

புறமுதுகு காட்டாது எவர்

போர் புரிந்து மடிகிறார்களோ

அவர்களுக்கு

வீரசுவர்க்கம்

வெகுமானம் ஆகும் -

என்றார்கள்.

 

O

 

முஸ்லிம் வீரர்கள்

முதுகெலும்புகளுக்குள்

மின்சாரம்

அணிவகுப்பு மரியாதையை

ஏற்பதற்காக

ஆரவாரத்தோடு நடந்தது!

 

O

 

ஏற்கெனவே

புதைக்கப்பட்ட

அல்ரமியின் தம்பி ஒருவன்

விதைக்கப்பட