பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்363


திரண்ட வடிவமான

அபூஜகல்...

பரணிலிருந்து

அம்மியில் விழுந்த

வாத்து முட்டையாய்

ஆனார் !

 

O

 

அண்ணலோ

வெற்றி நமதே என்று

வீர முழக்கமிட்டார்.

 

O

 

அய்ம்பத்து அய்ந்து வயதான

நபிகளின் உடலில்

பதினாறு வயது

முன்னறிவிப்பு இன்றி

முடி சூட்டிக் கொண்டது !

 

O

 

முஸ்லிம் வீரர்களின்

அணுத்துகள் ஒவ்வொன்றும்

அணிவகுப்பு நடத்தியது.

 

O

 

எதிரிகள் எழுபது பேர்

புதைந்தார்கள்...

எழுபது பேர்

கைதிகளாகப்

புகைந்தார்கள் !