| போர்க் கைதிகளைப் பொசுக்கி விடலாம் என்றார் உமர்... தலைக்குப் பணம் தருகிறவர்கள் தப்பலாம் என்றார் அபூபக்கர்... அப்படியே ஆகுக என்றார் அண்ணல் ! O வாரித்தர முடியாதவர்கள் வாளெடுப்பதில்லை இனி என்ற வாக்குறுதியோடு விடப்பட்டார்கள். O கல்வி பெற்றவர்கள் பத்து முஸ்லிம்களின் கண்ணைத்திறந்ததால் விடுவிக்கப் பட்டார்கள். O அய்ந்து பெண்மலர்களைப் பெற்ற ஒருவர் - அண்ணலிடம் உயிர்ப்பிச்சை கேட்டார், அண்ணலோ கலங்கினார்... ஆகுக என்றார அக்கணமே ! |
|
|