பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்367


வழியில்

குறைசிகளில் ஒருவன்

அவளது

ஈர உடம்பில்

ஈட்டியால் ஊடுருவினான்.

உயிர்

வாய்தா வாங்கிக் கொண்டது!

 

O

 

பிறகு

கணவனும்

காரிகையுமாக

இஸ்லாத்தில்

கரைந்தார்கள்!

 

O

 

மதீனா வாசிகள்

சாற்றினை

கைதிகளுக்குத் தந்துவிட்டு

சக்கையோடு மாத்திரமே

சமாதானம் ஆனார்கள்!

 

O

 

சம்மணம் போட்டிருக்கும்

சாணக்கிய நீதியே!

அண்ணலின்

நீதியின் முன்னால் நீ

காதில்லாத ஊசி ;

கரிமருந்தில்லாத

நெருப்புக்குச்சி..