பக்கம் எண் :

370 வலம்புரி ஜான்


ஆகவே தான்...

வயதானதும்

தவழ ஆரம்பிக்கிறான்.

பால் குடிப்பதற்காக

இறுதியாக

மண்மாதா

மாராப்புச் சேலைக்குள் அவனை

மறைத்துக் கொள்ளுகிறாள்!

 

O

 

பிறப்பும் இறப்பும்

ஒரு வளையத்தின்

இறுதியான

இணைப்புப் புள்ளிகள்.

 

O

 

மண்ணிலிருந்து

மண்ணுக்கு...

பட்டா, புறம்போக்கு

என்கிற பாகுபாடு

நிலத்தின் நினைவில்

நிற்காதது...

 

O

 

நிலத்திற்கு வேலிவைத்தவன்

ஆதிக்க வாதியின்

இரண்டாவது மனைவிக்குப்

பிறந்தவன்.