பக்கம் எண் :

372 வலம்புரி ஜான்


அலீக்கும்

அருமை மகளுக்கும்

மன்றல் நடத்தினார்

மாநபி.

திருமணத் தொகையாக

இரும்பு அங்கியை

இருத்தினார் அலீ.

 

O

 

சூரிய விளக்கு

சுடரின் முன்பாக உட்கார்ந்து

இருட்டைப்

புரட்டி வாசிக்க வந்தது போல

இறைவனின் தூதர்

தமது -

சாதகப் பறவையின்

திருமணத்தை

சாதாரணமாக நடத்தினார்.

 

O

 

ஆனால்

நுரை வருவதால்

சிறுநீர் தன்னை

கடல் என்று

சொல்லிக் கொள்கிறது!

கடலோ...

சூரியப் பிறையை

வரவேற்கிற

நீர்க்கோலங்களான

நுரைப்பூக்களை -