பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்373


பழுத்த நரை என்று

இருமிக்காட்டுகிறது!

 

O

 

விசித்திரத்தின்

விரிப்புத்தானே...

இயற்கை!

 

O

 

அப்சா உமரின் மகள்

இருபத்திரண்டே ஆன

இளங்காலைச் சொப்பனம்.

வெற்றியை

தந்தைக்கு வழங்கிய

பத்ருப் போர்

இவள் நெற்றியை

அமாவாசை ஆக்கியிருந்தது!

 

O

 

உமர்

அவளது வாழ்வின்

வசந்தத்திற்காக

வாசல் வாசலாக வந்தார்...

கதவுகள்

கண்களை மூடிக் கொண்டன!

 

O

 

நபிகளிடம் வந்தார்.

கண்கள் -

கோடை மழையாய்

கொதித்தன !