பக்கம் எண் :

374 வலம்புரி ஜான்


எழுத்தறிவுப் பூங்காவை

ஏந்தல் தமது

ஏந்தல் தனது

ஆளுகைக்கு உட்படுத்தினார்.

 

O

 

மகிழ்ச்சி வெள்ளத்தில்

மதீனம் மிதந்தது ;

மக்காவோ

கண்ணீர் அலைகளால்

கழுவப்பட்டது.

 

O

 

சுப்வான் என்பவர்

சூளுரை செய்தார்.

வாளின் வாயில்

நஞ்சை ஊட்டினார்!

 

O

 

நாளை

நபிகளுக்கு இறுதி என்று

நரி

தொடைதட்டியது!

 

O

 

மதீனம் வந்தார்

கைதானார்.

நபிகளிடம் இழுத்து வந்தார்கள்

அழைத்து ஏன் வரவில்லை?

அவர் கேட்டார்.