பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்375


மகனைச் சிறை மீட்கவே

மதீனம் வந்தேன் என்றான்.

 

O

 

மாநபி மனக்குளத்தில்

கள்ள நாணயத்தின்

சாய வார்த்தைகளால்

சங்கட அலைகள்

சலசலத்தன!

 

O

 

வாளில் விஷம் பூசிய

வஞ்சகத்தை

வரிமாறாமல்

வள்ளல் ஒப்புவித்தார்.

 

O

 

சுப்வான்

நச்சுப்பை இழந்த

நாகமானான்!

 

O

 

இறைவன் ஒருவனே!

இவரே அவன் தூதர் என்று

இடியென முழங்கினான்.

இஸ்லாம்

அங்குலம் வளர்ந்தது.

 

O

மக்காவில்