பக்கம் எண் :

376 வலம்புரி ஜான்


அபூசுப்யான்  

அணித்தலைவர் ஆனார்.

அவரது மனைவி இந்தா

பற்கள் முளைத்த

பலாச்சுளை!

பழிக்குப்பழி என்ற

பதச்சமையலால்

அவளது -

வாய் அடுப்பு வெந்தது.

 

O

 

இருநூறு ஒட்டகங்கள்

அபூசுப் யானைக்

கைத்தாங்கலாகக்

களத்திற்கு அழைத்து வந்தன.

 

O

 

சூதர்களும்,

சூழ்ச்சிக்காரர்களும்...

தங்களது

நச்சு நகங்களை

வெட்டிக் கொண்டார்கள்!

 

O

 

இந்தாவின் கணவருக்கு...

வெற்றி -

அடிவானம் ஆனது !

 

O

 

மதீனாவாசி ஒருவரை

மக்கிப்போக வைத்தார்...