பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்379


கோரைப் பற்களெல்லாம்

பூண்டுப் பற்களாகி விட்டன...

என்று குற்றம் சாட்டினர்.

 

O

 

வீரத்திற்கு

பதுங்குவது அழகா?

பாய்வது அழகா? என்று

பட்டிமன்றம் நடந்தது.

 

O

 

தூயவர் தொழப் போனார்.

வெளிவரும்போது

போராடையில்

வீரராக விளங்கினார்.

 

O

 

உங்கள் எண்ணமே

எங்கள் எண்ணம்.

இளைஞர்கள் அவரது

உதடுகளில்

கூடுகட்டப்பார்த்தனர்.

 

O

 

ஆயுதம் ஏந்திய பிறகு

பின் வாங்குவது

நபிமார்களுக்கு அழகல்ல

என்றார்கள்.

 

O

 

ஆயிரம்பேர் அணி வகுத்தனர்.

சிறுவர்கள் வெள்ளாமை