பக்கம் எண் :

380 வலம்புரி ஜான்


இல்லம் வந்து சேராது என்று

இப்னு உபை

முன்னூறு சூதர்களை

பின்னுக்கு இழுத்தான்.

 

O

 

எழுநூறு பேர்களென்றால் என்ன?

பகைவர் மூவாயிரம்

என்றாலும் என்ன?

அல்லா இருக்கிறான் என்று

ஆரவாரித்தார்கள்.

 

O

 

சுண்டுவிரல்கள்

சும்மா இருக்கட்டும்...

என்றார் அண்ணல்

அவைகளோ

நடுவிரல்களுக்கே

நடுக்கம் காட்டின.

 

O

 

சிறுவர்கள் போரார்வம்

காட்டியது போலவே

பெரியவரும் சேர்ந்தனர்.

 

O

 

அபூ அமீர் என்ற

சிலுவை மதத்தான் ஒருவன்

அறிய மாட்டீர்களா

என்னை என்றான்.