பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்381


மதீனா வாசிகள்

இந்த

வேதனைக்கு வித்திட்ட

அவனைப் பழித்தனர்.

 

O

 

நரியின் வால்

நரியை விட்டு

தனியாக நின்றது ;

நிழல்கூட அவனைவிட்டு

நீங்கிப் போனது.

 

O

 

அலீயின் வாளில்

தல்கா என்பவன்

தவிடு பொடியானான்.

 

O

 

அண்ணலின் வாளைப் பெற்ற

அபூதஜனா

மக்கா வாசிகளின்

தலைகள் பலவற்றை

அறுவடை செய்தார்.

 

O

 

பூங்கொடி ஒன்று

எதிர்ப்பட்டது.

ஓங்கியவாள்

ஒடுங்கியது!

அவரது வாள்